‘ரா ரா’ பாட்டுக்கு ஜோதிகா அப்படி ஆட இது தாங்க காரணம் – உண்மையை போட்டுடைத்த கலா மாஸ்டர்!

0
134
#image_title

‘ரா ரா’ பாட்டுக்கு ஜோதிகா அப்படி ஆட இது தாங்க காரணம் – உண்மையை போட்டுடைத்த கலா மாஸ்டர்!

2000 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்த நடிகை ஜோதிகா.அஜித்தின் வாலி படத்தில் ‘ஓ சோனா’ என்ற பாட்டில் தோன்றி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.அதன் பிறகு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவே விஜய்,அஜித்,கமல்,விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.இவர் தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி.இப்படத்தில் படத்தில் பிரபு,வடிவேலு,நயன்தாரா,நாசர்,ஜோதிகா என்று பல திரைப் பிரபலங்கள் நடித்தன. சந்திரமுகி வெளியாகி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.இதற்கு முக்கிய காரணம் ஜோதிகாவின் நடிப்பு என்று சொல்லப்பட்டது.அவர் ஏற்று நடித்த அந்த ரோலை பல நடிகைகள் நடிக்க தயங்கினார்கள்.ஆனால் ஜோதிகா இன்றும் பாராட்டப்படும் அளவிற்கு அந்த ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

முதலில் இந்த ரோலில் நடிக்க பயந்த ஜோதிகா பின்னர் அதனை சவாலாக கொண்டு நடித்தார்.
அந்த படத்தில் வரும் ‘ரா ரா’ பாடல் காலங்கள் கடந்தாலும் அதன் புகழ் மாறாது.அவ்வளவு அழகாக நடிகர் வினித்துடன் தனது நடனத்தை வெளிப்படுத்தினார்.

  • வினித் ஒரு க்ளாஸிக் டான்சர் என்பதால் அவருடன் நடனம் ஆட முதலில் ஜோதிகா பயந்துள்ளார். ரா ரா பாட்டின் டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் ஜோதிகாவிடம் அவரை பார்த்து நீ பயப்படக் கூடாது.உன்னால் எது முடியுமோ அதை செய் என்று சொல்லி இருக்கிறார்.அத்துடன் நீ மட்டும் நன்றாக ஆடி முடித்தால் உனக்கு ஒரு நல்ல சேலை ஒன்று வாங்கித் தருகிறேன் என்று சொல்லி தான் காலா மாஸ்டர் ஜோதிகாவை ரா ரா பாட்டிற்கு ஆட வைத்துருக்கிறார்.இதனை தொடர்ந்து படம் வெளியாகி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.நடிகை ஜோதிகாவின் நடிப்பு மற்றும் நடனம் பெரிதும் பேசப்பட்டது.இதனால் ஜோதிகாவிற்கு ஒரு வைர வளையல் வாங்கிக் கொடுத்து அவரை கௌரவப்படுத்தினேன் என்று சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலா மாஸ்டர் கூறி இருக்கிறார்.
Previous articleபிளாக்பஸ்டர் அடித்த ஜவான்!! திரையரங்குகளில் இனிமேல் தீபாவளி கொண்டாட்டம் தான் சாதித்த அட்லீ!! 
Next articleசூர்யாவின் அடுத்த படத்தில் இவங்க தான் ஹீரோயின்! செம்ம குஷியில் ரசிகர்கள்!