நம் கையில் பணம் தாங்காமல் போக காரணம் இது தான்!! இனி இதுபோன்று செய்யாதீர்கள்!!

Photo of author

By Divya

நம் கையில் பணம் தாங்காமல் போக காரணம் இது தான்!! இனி இதுபோன்று செய்யாதீர்கள்!!

தங்களிடம் பணம் தங்காமல் தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் சேராமல் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது.

வீட்டில் பணம் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்:-

*நம்மில் பெரும்பாலானோர் வீட்டை துடைக்கவே சலித்து கொள்கிறோம். பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்யாமல் வாரத்திற்கு ஒரு முறை செவ்வாய், வெள்ளி தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டை துடைப்பது மிகவும் நல்லது. பண்டிகை காலங்களில்,நல்ல நாட்களில் நாம் செய்யும் சில தவறுகளால் தான் நம்மிடத்தில் செல்வம் தங்கமால் தேவையற்ற செலவுகள் நம்மை துரத்தி வருகிறது.

*வீட்டு விசேஷங்கள், செவ்வாய், வெள்ளி கிழமை பண்டிகை நாட்களில் வெண்ணெயை உருக்க கூடாது. காரணம் வெண்ணெய் மகா லட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் அவற்றை உருகினால் வீட்டில் லட்சுமி கடாச்சம் நீங்கி விடும் என்பது முன்னோர்கள் கருத்து.

*வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஒருபோதும் பாகற்காயில் சமைத்து பரிமாற கூடாது. விசேஷ நாட்களில் பாகற்காயை உணவாக செய்தால் வீட்டில் குடி இருக்கும் மகா லட்சுமி வீட்டை விட்டு நீங்கி விடுவாள் என்பது ஐதீகம்.

*வீட்டில் அரிசி, கல் உப்பு, பருப்பு உள்ளிட்டவைகள் நிறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதற்கு தாட்பாடு ஏற்பட்டால் வீட்டில் லட்சுமி கடாச்சம் நீங்கி விடும்.