வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

Photo of author

By CineDesk

வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

CineDesk

This is the time for Vande Bharat trains!! Information released by Southern Railway!!

வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலானது இந்த மாதத்தின் இறுதிக்குள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும் மற்றும் சென்னை – கோயம்புத்தூர் இடையே ஒரு ரயிலும் என மொத்தம் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதனையடுத்து மூன்றாவதாக ஒரு ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், காலை ஆறு மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் ரயிலானது பிற்பகல் இரண்டு மணி முதல் 2.30  மணிக்குள் சென்னை வரும்.

பிறகு, சென்னையில் இருந்து பிற்பகல் மூன்று மணிக்கு புறப்படும் இந்த ரயில் மீண்டும் 10.30 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதால் பயணிகளுக்கு பயணம் செய்யும் நேரம் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் அதனை குறைக்கும்படி கோரிக்கையை எழுப்பினர்.

அதன் பின்னர், “வந்தே பாரத்” ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணத்தை இருபத்து ஐந்து சதவிகிதமாக குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாக பயணம் செய்வோர்களின் ரயிலில் கட்டண சலுகையை அளிக்கவும் ரயில்வே வாரியமானது முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.