இந்த இலை உங்கள் முகத்தில் உள்ள மங்கு தேமல் பருக்களை சட்டுனு அகற்றும்!

Photo of author

By Divya

இந்த இலை உங்கள் முகத்தில் உள்ள மங்கு தேமல் பருக்களை சட்டுனு அகற்றும்!

சருமத்தை முறையாக பராமரிக்காவிட்டால் பருக்கள், தேமல், மங்கு, கரும் புள்ளி பாதிப்பு ஏற்படும். இதனால் முகம் பொலிவை இழந்து முதுமை தோற்றம் தென்படும். சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டு இருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும். சிலர் கெமிக்கல் நிறைந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுவதினால் ஏற்படுகிறது.

இது போன்று முக அழகை கெடுக்கும் பாதிப்பில் இருந்து தப்பிக்க அவரை இலையை அரைத்து பயன்படுத்துங்கள். இந்த அவரை இலை பேஸ்பேக் எவ்வாறு செய்வது மற்றும் எவ்வாறு சருமத்திற்கு பயன்படுவது என்று விளக்கப்பட்டுள்ளது.

1)அவரை இலை
2)மஞ்சள் தூள்

ஒரு கப் அளவு அவரை இலையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 முறை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

அடுத்து இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த அவரை பேஸ்ட்டை கிண்ணத்தில் போட்டு சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் தடவும்.

சிறிது நேரம் மஜாஜ் செய்து 1/2 மணி நேரத்திற்கு விட்டு விடவும். பிறகு வெது வெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்யவும். இந்த அவரை இலை பேஸ் பேக்கை தினமும் உபயோகித்து வந்தால் சரும பாதிப்பு முழுமையாக நீங்கும்.