இந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்!

0
195
This one app is enough! Drinking water can be supplied from anywhere to any area!
This one app is enough! Drinking water can be supplied from anywhere to any area!

இந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்!

இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் மாறி வருகின்றது.ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகமே கையில் அடங்கும். பண பரிவர்த்தனை முதல் அனைத்துமே இப்பொழுது அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்து கொள்ளாலாம்.அந்த வகையில் கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியில் செல்போன் ஆப் மூலம் குடிநீர் விநியோகிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேட்வால்வு கன்வெட்டர் பொருத்தப்பட்டு செல்போன் ஆப் மூலம் தண்ணீர் விநியோகிப்பவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் எந்த பகுதிகளுக்கு எவ்வளவு நீர் ,எந்த அழுத்தத்தில் செல்ல வேண்டும் ,எவ்வளவு நேரம் செல்ல வேண்டும் எப்போது நிறுத்த வேண்டும் என்பதை செல்போன் மூலமாக கட்டளையிடலாம். இதனால் குடிநீர் விநியோகம் சீராகவும் தங்குதடையின்றியும் கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த மொபைல் ஆப் மூலம் குடிநீர் விரையம் ஆவது தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி!
Next articleஒரே ஒரு படம்தான்… உச்சம் தொட்ட கமல் சம்பளம்… இந்தியன் 2 வுக்கு இத்தனைக் கோடியா?