எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது?

Photo of author

By Divya

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது?

உடலில் எலும்பு வலிமையாக இல்லையென்றால் தேய்மானம் ஏற்பட்டு, மூட்டு வலி, எலும்பு தொடர்பான பாதிப்பு அனைத்து பாதிப்புகளும் ஏற்படும்.

எலும்பு வலிமை அதிகரிக்க நாம் சில வீட்டு வைத்தியத்தை செய்து வருவது உகந்த ஒன்றாக இருக்கும்.

*கருஞ்சீரகம்
*வெந்தயம்
*ஓமம்

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் எலும்பு தேய்மான பாதிப்பு நீங்கி எலும்பின் ஆரோக்கியம் மேம்படும்.

ஓமம், வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள்…

அதிகப்படியான கால்சியம், நார்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

எலும்பை வலுவாக்கும் பானம்…

தேவைப்படும் பொருட்கள்…

*ராகி மாவு
*ஆப்பிள்
*தாமரை விதை
*பேரிச்சம் பழம்

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் அளவு ராகி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து காய்ச்சி கொள்ளவும். ஒரு ஆப்பிளை தோல், விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து 1 கப் அளவு தாமரை விதையை மொறுமொறுப்பாக வறுத்து ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். பிறகு அதில் 2 பேரச்சம் பழம் மற்றும் ஆப்பிள் துண்டுகளை போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஆறவைத்துள்ள ராகி கூழை அதில் சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிளாஸுக்கு மாற்றி குடிக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் எலும்பு தேய்மானம், எலும்பு பலவீனம் நீங்கி எலும்பின் வலிமை அதிகரிக்கும்.