சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல். தொடரும் அடங்கும். ஆண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐ.பி.எல். தொடருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்ப்பு கொடுப்பார்கள்.
இதன் காரணமாகவே ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஐ.பி.எல். தொடர் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை எப்படியும் நடத்தியாக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் போட்டியை நடத்த அனுமதி வாங்கியது. இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19 தேதி தொடங்குகிறது. மேலும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நடைபெறுமா அல்லது ரசிகர்கள் இல்லாமல் நடைபெருமா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து பதில் அளித்த ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவை எங்கள் நாட்டு மக்கள் நேரில் பார்க்க விரும்புகிறோம். மேலும் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் 30 முதல் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம்.
எங்கள் அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் கொரோனா வைரசின் கோர தாண்டவத்தில் இருந்து பாதுகாத்து உள்ளது. தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுளோம். கடந்த ஆண்டு உலக கோப்பை தகுதி சுற்று எங்க நாட்டில் வெற்றிகரமாக நடத்தினோம். அதே போல இந்த ஐ.பி.எல். திருவிழாவை எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும்’ என்று அவர் கூறினார்.