கண் பார்வைக் கோளாறா? உடனே போய் இந்த குளத்தில் நீராடுங்கள்!

0
66

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ரத வீதியில் தேருக்கு எதிரில் தூவாய் நாதர் கோவில் அமைந்திருக்கிறது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இருக்கின்ற 89வது தலம் இது என்று சொல்லப்படுகிறது.

நான் பாத்துக்குறேன் இந்த தல இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கின்றார். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருக்கிறது. இது அந்த கோவிலுக்கு தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த கோவில் கடலினுள் மண் கோவிலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் தன்னுடைய இரண்டாவது மனைவியான சங்கிலி நாச்சியார் இடம் நான் எப்போதும் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

திடீரென்று அவருக்கு தன்னுடைய முதல் மனைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். செய்து கொடுத்த உறுதிமொழியை மீறியதன் காரணமாக, சுந்தரரின் பார்வை பறிபோனதாக சொல்லப்படுகிறது. மனம் கலங்கிய அவர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று மறுபடியும் பார்வை கொடுக்குமாறு வேண்டி இருக்கின்றார். காஞ்சிபுரம் காமாட்சியின் கருணை காரணமாக, ஏகம்பரேஷ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் கொடுத்து இருக்கின்றார்.

மறுபடியும் அவர் பல சிவாலயங்களை தரிசனம் செய்து திருவாரூர் வந்து இன்னொரு கண்ணுக்கு பார்வை வழங்குமாறு வேண்டி இருக்கின்றார். அவருடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்ட இறைவன், இந்த தளத்தில் அக்னி மூலையில் இருக்கின்ற குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை வரும் என்று தெரிவித்திருக்கிறார். சுந்தரர் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றிருக்கிறார் சுந்தரருக்கு இங்கே கண்பார்வை கிடைத்ததன் அடையாளமாக இந்த திருத்தலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் சமயத்தில் அவருடைய திருமேனியில் கண் பார்வை தெரிவதை அனைவரும் காணலாம் என்று சொல்லப்படுகிறது.

கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் ஞாயிற்று கிழமைகளில் இந்த குளத்தில் நீராடி இங்கே இருக்கின்ற இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியவுடன் இங்கே இருக்கின்ற இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்வதும், அன்னதானம் செய்வதும் வழக்கம் என்று சொல்லப்படுகிறது.