இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டி! இளம் வீரரை ஓபனராக இறக்கிய ராகுல் டிராவிட்!

0
89

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் நட்சத்திர வீரர் ஒருவர் நடு வரிசையில் களமிறக்கப்பட்டு இருக்கின்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருக்கிறது.இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங்11 தொடர்பான கேள்விகள் இணையதளத்தை ஆக்கிரமித்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் களமிறங்கியிருக்கிறார். அதோடு அவர்தான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டது தான். அவரோடு மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக இந்த அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் ப்ரித்விஷா களம் புகுந்து இருக்கிறார். இவர்கள் இருவருக்குமே முன்னரே ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் ஒன்றிணைந்து ஆடி இருப்பதால் அவர்கள் மீது இந்த அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் அதீத நம்பிக்கை கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருநாள் போட்டியை பொருத்தவரையில் இந்திய அணியில் ரோகித் சர்மா அவர்களும், ஷிகார் தவான் அவர்களும் தான் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி வருகிறார்கள். சச்சின் மற்றும் சேவாக் என்ற அதிரடி ஜோடியை கடந்து அடுத்தபடியாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் என்று உலக அளவில் பெயர் வாங்கிய ஒருவர் என்றால் அது ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் தான்.ஆனால் தற்போது இந்த அணிக்கு ஷிக்கர் தவான் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரராக இன்னொரு வீரராக யாரை களம் இறங்கலாம் என்று யோசனை செய்த ராகுல் டிராவிட் இளம் வீரரான ப்ரித்விஷாவை தேர்ந்தெடுத்தார்.

அதோடு இந்த இரு வீரர்களும் ஐபிஎல் போட்டியில் பல வருடங்களாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஐபிஎல் போட்டியில் நீண்டகாலமாக மிகச் சிறப்பாக செயலாற்றி வந்த சூரியகுமார் அவர்களுக்கு சென்ற மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்து டி20 தொடரில் நாம் சர்வதேச வாய்ப்பு கிடைத்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தற்சமயம் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும் அவர் அதிரடியாக விளையாடுவார் என்று நினைத்து அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அதோடு நேற்றைய தினம் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்த ஒருநாள் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த இளம் வீரர்கள் கொண்ட அணியை தொடர்ச்சியாக மேம்படுத்த நாங்கள் விருப்பம் கொண்டு இருக்கிறோம். அதோடு எல்லா வீரர்களும் நாட்டிற்காக விளையாட அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். அவர்களுடைய திறமைகளை நிரூபிப்பதற்கு வாய்ப்புகள் நிச்சயமாக கிடைக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்திருக்கிறார்.