பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

முறையற்ற உணவு முறை பழக்கத்தால் விரைவில் பற்கள் சொத்தையாகி விடுகிறது.இதனால் சொத்தைப்பல்,பல் கூச்சம்,ஈறுகளில் வலி,பல் வீக்கம்,பல் குடைச்சல்,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது.

அதிகப்படியான இனிப்பு பொருட்களை உண்பது,முறையாக பல் துலக்காதது போன்றவை பல் சொத்தையாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.இந்த சொத்தைப் பற்களால் வீக்கம் ஏற்படும் வீக்கத்தை குணமாக்க வீட்டில் உள்ள கருப்பு மிளகு,உப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து கீழே சொல்லப்பட்டுள்ள முறைப்படி உபயோகித்து பாருங்கள்.உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கருப்பு மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி

*தூள் உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 2 தேக்கரண்டி மிளகு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.பின்னர் அதில் இருந்து 1 தேக்கரண்டி மிளகு தூளை ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் தூள் உப்பு 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்த்து சிறு துளி தண்ணீர் சேர்த்து குழப்பி கொள்ளவும்.

பின்னர் இதை சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வைக்கவும்.அதேபோல் பல் கூச்சம் இருப்பவர்கள் பல் துலக்கும் பிரஷில் இந்த கலவையை சேர்த்து நன்கு பற்களை துலக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் பல் கூச்சம் நீங்கும்.