மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

0
230
#image_title

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

மழை காலத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய மூன்று மூலிகைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மழை காலம் தொடங்கிய விட்டது என்றாலே ஒரு சிலருக்கு சளி தொற்று பிடிக்கும். அதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி மட்டுமில்லாமல் பலவிதமான நந்தா தொற்றுகளும் நம்முடைய உடலை எளிமையாக தாக்கும்.

குறிப்பாக சளி நாள்பட்ட நோயாக இருப்பதால் ஒருவருக்கு மழைகாலங்களில் சளி பிடித்துவிட்டால் எளிமையாக குணமாகாது. என்னதான் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் சளி தொந்தரவு நம்மை விட்டு போகாது. எனவே இது போன்ற மழை கால தொற்றுகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் உணவில் சில மூலிகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றில் முக்கியமான 3 மூலிகைகள் பற்றி பார்க்கலாம்.

1. அஸ்வகந்தா

அஸ்வகந்தா மூலிகை நம்முடைய உடலுக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடிய மூலிகைகளில் ஒன்றாகும். அஸ்வகந்தாவில் நோயெதிர்ப்பு-மாடுலேட்டிங் பண்புகள் உள்ளது. இதனால் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும். அஸ்வகந்தா மூலிகையை நாம் மழை காலத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது மழைகால நோய்கள் எற்படுவதை தடுக்கலாம்.

2. வேப்பம் பூ…

மருத்துவ மரமாக கருத்தப்படும் வேப்ப மரத்தின் ஒரு பகுதியாக வேப்பம் பூ உள்ளது. வேப்ப. மரத்தின். அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படுவது போல வேப்பம் பூவும் மருந்தாக பயன்படுகின்றது. வேப்பம் பூவில் நிம்பிடின் மற்றும் நிம்போலைடு எனப்படும் மூலக்கூறுகள் இருக்கின்றது. இவை இரண்டும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இந்த வேப்பம் பூவை தேநீருடன் சேர்த்து அருந்தலாம். இதனால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படைகின்றது. மேலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

3. கிலோய்

அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆண்டிபிரைடிக் பண்புகளை கொண்டது இந்த கிலோய் மூலிகை. இதனால் இந்த கிலோய் மூலிகையை சாப்பிட்டு வரும் பொழுது மழைகாலத்தில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்து போராடக் கூடிய வலிமையை நம்முடைய உடலுக்கு அளிக்கின்றது. மழை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க கிலோய் டிக்காஷனை குடிக்கலாம். இதனால் நம்முடைய உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.