இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய
பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது.
முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தது.