கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!!

0
152
#image_title

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!!

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரியில் AICTE தான் பாடப்பிரிவுக்கு அனுமதி தான் வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் 340 பாடப்பிரிவுகள் பாலிடெக்னிக்கில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் காற்றாலை குறித்து ஒரு பாடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் படிக்கும்போதே பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக 54 பாலிடெக்னிக் கல்லூரிகள் 2783 கோடி மதிப்பீட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன்மிகு மையங்களாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

author avatar
Savitha