சாலையோரம் வெடித்த கண்ணிவெடியால் மூன்று பேர் பலி

Photo of author

By Parthipan K

ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் சாலையோரம் பயங்கரவாதிகள் கண்ணிவெடியை புதைத்து வைத்திருந்தனர். இன்று காலை அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றபோது திடீரென கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். கண்ணிவெடி தாக்குதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.