மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

0
65
#image_title

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் இந்த பொருட்களுக்கு கைரேகை பதிவு முக்கியம் ஆகும். ஆனால் இந்த கைரேகை பதிவு முறையால் சில சிக்கல்களை ரேசன் அட்டைதாரர்கள் சந்தித்து வருகின்றனர். அது என்னவென்றால் வயதானவர்கள், விரலில் அடி, கீறல் ஏற்பட்டவர்களின் கை ரேகை பதிவை கருவி ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் பொருட்கள் வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த கை ரேகை பிரச்சனையால் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்கள் மறுக்கின்றனர். இதனால் அட்டை தாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் இதற்கு மாற்றாக தற்பொழுது கருவிழி ஸ்கேன் முறையில் பொருட்களை விநியோகிக்கும் முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு இடங்களில் சோதனை முயற்சிக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இந்த திட்டம் செய்யப்படுத்தப்பட இருக்கிறது.

தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 70 ரேசன் கடைகளுக்கு பிஓஎஸ் கருவி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் அதில் 30 ரேசன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வாங்கும் வசதி தொடங்கப்பட்டு இருக்கிறது. முதலில் குடும்ப நபர்களில் யார் பொருட்கள் வாங்க வருகிறார்களோ அவர்களது கருவிழி ஸ்கேன் செய்யப்படுகிறது. பின்னர் அவர்களது விவரம் அந்த கருவியில் வந்ததும் பொருட்களுக்கான பில் தரப்படுகிறது. பின்னர் எப்பொழுதும் போல் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.