புதிய சகாப்தம் படைத்தவர் டோனி

Photo of author

By Parthipan K

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார். தோனி  புதிய இந்தியாவின் அடையாளம் ஆவார்.  உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு டோனியை பெருமைப்படுத்தும். உலகின் சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர்.
அவர் இந்தியாவிற்கு கோப்பையை வென்ற தருணம் யாராலும் மறக்க முடியாது. இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் டோனி. சக வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையிலும் கூட  டோனி தனது குழந்தையுடன் விளையாடிது  தனது மனதை கவர்ந்தது என்று கூறினார்.