டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கலாம்

Photo of author

By Parthipan K

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19 முதல் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான டோனி,  ரெய்னா உள்பட சென்னை வீரர்கள்  சேப்பாக்கத்திற்கு வந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டோனி சர்வதேச போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அனைவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பின்னர் ஒய்வு பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடிரென ஒய்வு அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து டோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேசவ் ரஞ்சன் பானர்ஜி  பேசும்போது டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கனும். அடுத்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலக கோப்பையில் விளையாடியிருக்கலாம். அவரது உடற்தகுதியை பொறுத்த வரையில்  எளிதாக விளையாடலாம் மேலும் மீடியாக்கள் அவரை ஒரு வருடமாக விளையாடாத காரணத்தினால் திரும்ப அணிக்கு திரும்ப முடியுமா என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதன் காரணமாகவே அவர் ஓய்வை அறிவித்து இருக்கலாம் என்று அவர் கூறினார்.