டோனியின் பெயரை சூட்ட வேண்டும்

Photo of author

By Parthipan K

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி யாரும் எதிர்பார்க்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது அந்த போட்டியில் இறுதியில் டோனி தனது ஸ்டைலில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற செய்தார் இந்த ஷாட் மறக்க முடியாத ஒன்றாக கிரிக்கெட் வாழ்க்கையில் அமைந்தது.
1983-ம் ஆண்டுக்குப்பின் சுமார் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இதுபற்றி மும்பை கிரிக்கெட் சங்க உறுப்பினர் அஜிங்க்யா நாய்க் பேசும்போது இந்திய அணிக்காக டோனி ஈடு செய்ய முடியாத பங்களிப்பை அளித்துள்ளார். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த கடைசி சிக்ஸ் பந்து எந்த சீட்டில் விழுந்ததோ, அந்த சீட்டிற்கு நிரந்தரமாக டோனியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கூறினார்.