நாள்பட்ட சளியை கரைத்து தள்ளும் நாட்டு மருத்துவம்!! இதை பின்பற்றினால் பலன் உறுதி!!

Photo of author

By Divya

நாள்பட்ட சளியை கரைத்து தள்ளும் நாட்டு மருத்துவம்!! இதை பின்பற்றினால் பலன் உறுதி!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை கரைத்து மலம் வழியாக வெளியே தள்ளும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.

தீர்வு 01:-

தான்றிக்காய்
நெய்
தேன்

ஒரு தான்றிக்காயை நீரில் போட்டு ஊற வைத்து அதன் விதையை நீக்கி விடவும்.பிறகு அதன் சதைப் பற்றை நெய் மற்றும் தேனில் கலந்து சாப்பிட்டால் தீராத சளி தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 02:-

சித்தரத்தை
கற்பூரவல்லி
தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு சித்தரத்தை,2 கற்பூரவல்லி இலை சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் சளி பாதிப்பு முழுமையாக நீங்கும்

தீர்வு 03:-

சித்தரத்தை

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி இடித்து வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கிய சளி கரைந்து வெளியேறும்.

தீர்வு 04:-

கருப்பு மிளகு

ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/2 தேக்கரண்டி கருப்ய மிளகை இடித்து சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்.

தீர்வு 05:-

துளசி
சுக்குத் தூள்

ஒரு கைப்பிடி அளவு துளசியை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கப் நீரில் இந்த துளசி சாற்றை வடிகட்டி 1/4 தேக்கரண்டி சுக்கு தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி கரைந்து வெளியேறும்.

தீர்வு 06:-

தூதுவளை
ஆடாதோடை

அடுப்பில் ஒரு பாத்திரம் 2 தூதுவளை, ஒரு ஆடாதோடை இலையை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி,வறட்டு இருமல் முழுமையாக குணமாகும்.