அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டில் சோகம்

Photo of author

By Parthipan K

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இவருக்கு ஃப்ரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப் என 2 சகோதரர்களும், மரியானா டிரம்ப் பெர்ரி, எலிசபெத் டிரம்ப் க்ரவ் என 2 சகோதரிகளும் உள்ளனர். இதில் ராபர்ட் டிரம்ப்பே இளைய சகோதரர் ஆவார். இவர் ரியல் தொழிலதிபர் ஆவார் 72 வயதான இவர் டிரம்ப்பின் தொழில்நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்தார். உடலநலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட இவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவரை அதிபர் டிரம்ப்  அடிக்கடி விசாரித்து வந்தார். திடிரென அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ராபர்ட் மறைவுக்கு அதிபர் டிரம்ப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். மேலும் டிரம்ப் பேசும்போது  டிரம்ப்,’ராபர்ட் எனது சகோதரன் மட்டுமல்ல, எனது நல்ல நண்பன். அவரை பெரிதும் தவறவிடுகிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம்’ என கூறினார்.