தவா பன்னீர்

0
75

தவா பன்னீர்

தேவையான பொருட்கள்:

பன்னீரை ஊற வைக்க:

பன்னீர் – 400 கிராம்

தயிர் – 3 டேபிள் ஸ்பூன்.

காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்.

கரம் மசாலா தூள் – 2 டேபிள் ஸ்பூன்.

உப்பு – 1 டேபிள் ஸ்பூன்.

மசாலா தயாரிக்க

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது

தக்காளி – 3 நறுக்கியது

பச்சை மிளகாய் – 3 நறுக்கியது

கொத்தமல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் தூள் – 1 டேபிள் ஸ்பூன்.

சாட் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்.

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்.

பெரிய குடைமிளகாய் – 1 வெட்டப்பட்டது

மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

1. பன்னீரை ஊற வைக்க ஒரு பாத்திரத்தில் பன்னீர், கரம் மசாலாத்தூள், உப்பு, தயிர், காஷ்மீரி மிளகாய்த்தூள் அனைத்தையும் நன்கு கலக்கி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

2. ஒரு பெரிய தோசை சட்டியில் எண்ணெய் ஊற்றி தோசை சட்டி சூடேறியதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்.

3. வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, சீரகத்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

4. அடுத்து ஊற வைத்த பன்னீர் துண்டை எடுத்து அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

5. கடைசியாக இதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.

6. மணமான மற்றும் சுவையான தவா பன்னீர் தயார்.

 

author avatar
Kowsalya