கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அருணகிரி .இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பெருந்துறையில் இருந்து காஞ்சிக்கோவில்லுக்கு செல்வதற்காக சேலம்-கோவை நெடுஞ்சாலையில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் கோவையை சேர்ந்த அஜய்குமார் என்பவர் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையை கடக்க முயன்ற அருணகிரி ,கிருஷ்ணவேணி தம்பதியினரின் மோட்டர்சைக்கிளின் மீது கார் மோதியது.அதில் மோட்டர்சைகளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அந்த கார்ரானது அருகில் இருந்த பள்ளத்தில் மோதியது. மேலும் அக்கம்பக்கத்தினர் இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த தம்பதியினரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதனை சரி செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.