இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!!
இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.அந்த வகையில் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
இதில் அதிகம் சாமானிய மக்கள்தான் விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது.
இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இந்த நிலையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள சிக்னல் பிரச்சனையின் காரணமாக குறிப்பிட்ட ரயில்கள் அனைத்தும் முன்பதிவில்லாமல் இயக்கப்படாது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் திருச்சியில் இருந்து ஈரோடு ,தஞ்சாவூர் மற்றும் கரூர் செல்லும் ரயில்கள் முன்பதிவில்லாமல் இயக்கப்டாது .
இதனை போல் சுமார் 8 ரயில்கள் முன்பதிவில்லாமல் இயக்கபடாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கபடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வகையில் சீரமைப்பு பணிக்காக பாண்டியன் ,நெல்லை ,பொதிகை போன்ற தென்மாவட்ட ரயில்கள் இயக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 20 க்கும் மேற்பட்ட மாவட்ட ரயில்கள் இயக்க 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.