சிக்கி தவிக்கும் பிரேசில்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.