டிரம்ப் சர்ச்சை கருத்து

Photo of author

By Parthipan K

அமெரிக்க அதிபரான டிரம்ப் கமலா ஹாரிஸ்  பற்றி வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் கமலா ஹாரிசுக்கு இருக்கிறதா? என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறக்காதவராக இருந்தால், தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்றும் அப்போது கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை வேட்பாளராக தேர்வு செய்யும் முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்து இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.  இது குறித்து தேர்தல் பிரசார நிதிக்குழுவின் உறுப்பினர் அஜய் புடோரியா  பேசும்போது கமலா ஹாரிஸ் என்பவர் கலிபோர்னியாவில் உள்ள ஆக்லாந்தில் 1964-ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி பிறந்தார். 1787-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் பிறந்தவர் ஒருவர் அமெரிக்காவின் இயற்கையான குடிமகனாக கருதப்படும் என அமெரிக்க சட்ட பிரிவு உள்ளது என்று கூறினார்.