ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாக வினியோகம் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை

0
64

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.சில வருடங்களுக்கு முன் தொழிலாளர்களுக்கு கையில் பணம் கொடுத்து வந்தன.ஆனால் கடந்த ஆண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்து அதன்படி அன்றில் இருந்து தற்போது வரை ஏடிஎம் மூலமாகவே தொழிலாளர்களுக்கு பணம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு வால்பாறை மற்றும் அதன் சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் ஏடிஎம் இடங்களில் பணம் இல்லை என்பதால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணம் சிக்கலாகி வந்துள்ளது. இங்கு வசிக்கும் தொழிலாளர்கள் கடந்த 3 மாதமாக தனியாக வால்பாறையில் நடந்து சென்று அங்குள்ள வங்கிகளில் ஏடிஎம்மில் பணம் எடுத்து வருகின்றனர்.சில சமயம் ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளதால் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வந்தும் வெறுங்கையோடு செல்வதாகவும் ,இதற்காக மக்கள் தனியார் வாகனங்களுக்கு பணம் கொடுத்து சென்று வருவதாகவும் கூறியுள்ளனர் .

எனவே முன்பு இருந்த போலவே தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்களுக்கு பணம் நேரடியாக வினியோகம் செய்ய வேண்டும் எனதோட்டக் தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பி.பரமசிவம் கோரிக்கை விடுத்தனர்.

author avatar
Parthipan K