உங்கள் பாத்ரூம் வாசனையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

உங்கள் பாத்ரூம் வாசனையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

உங்களில் பலரது வீடுகளில் பாத்ரூம் துர்நாற்றத்தை அதிகளவு வெளிப்படுத்தும். எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் துர்நாற்றம் மட்டும் நீங்கியபாடில்லை என்று வருந்தும் நபர்கள் கை வலிக்க சுத்தம் செய்யாமல் வீட்டு பாத்ரூமை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள வாசனை கட்டி செய்து பாத்ரூமில் மாட்டி வையுங்கள். இந்த வாசனை கட்டி எவ்வாறு செய்வது என்பது குறித்த எளிய செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

*கற்பூரம்
*ஆப்ப சோடா
*புட் கலர்
*வாசனை திரவியம்
*க்ளு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 10 கற்பூரத்தை இடித்து சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் 4 தேக்கரண்டி ஆப்ப சோடா(பேக்கிங் சோடா) சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் வாசனைக்காக எதாவது ஒரு திரவியத்தை சேர்த்து கொள்ளலாம். பின்னர் நிறத்திற்காக புட் கலர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து கெட்டித் தன்மைக்காக சிறிது க்ளு சேர்த்து கலந்து விடவும்.

ஒரு பேப்பர் கப்பில் இதை சேர்த்து அழுத்தி ஒரு வடிவத்திற்கு கொண்டு வரவும். பின்னர் இதை வெயில்படும் இடத்தில் நன்கு காயவைத்து கொள்ளவும்.

காய்ந்து வந்ததும் பேப்பர் கப்பை அகற்றி அதனுள் இருக்கும் வாசனை கட்டியை பாத்ரூமில் ஒரு இடத்தில் மாட்டி வைக்கவும். இவ்வாறு செய்தால் பாத்ரூமில் வீசும் துர்நற்றம் நீங்கி நறுமணம் வீசும்.