முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளர கேரளா பெண்கள் பயன்படுத்தும் எண்ணையை ட்ரை பண்ணுங்கள்..!!
இன்றைய கால வாழ்க்கை முறையில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல்.
தலை முடி உதிரக் காரணம்:-
*பொடுகு
*தலை அரிப்பு
*உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம்
*இரத்த சோகை
*ஜீன் குறைபாடு
*தலைமுடி வறட்சி
*மன அழுத்தம்
*முறையற்ற தூக்கம்
இந்த தலைமுடி உதிர்வு பாதிப்பு நின்று முடி அடர்த்தியாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை செய்து பார்க்கவும்.
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் எண்ணெய்
*கற்றாழை
*கறிவேப்பிலை
*கருஞ்சீரகம்
செய்முறை…
ஒரு கற்றாழை மடலை எடுத்து தோல் நீக்கி அதன் ஜெல்லை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் கலவையை ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் 1/4 கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த எண்ணையை தினமும் தலைக்கு உபயோகித்து வருவதன் மூலம் முடி உதிர்வு பாதிப்பு நின்று அடர்த்தியாக வளரும்.