முகம் பொலிவாக இருக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..!!

Photo of author

By Divya

முகம் பொலிவாக இருக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..!!

முகப்பொலிவை ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள். கருப்போ, வெள்ளையோ எதுவாக இருந்தாலும் முகம் பொலிவாக இருந்தால் மட்டுமே நாம் அழகாக தோன்றுவோம். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் பெரும்பாலானோர் முகம் பொலிவற்று காணப்படுகிறது.

இதனால் நம்முடைய தன்னம்பிக்கை குறையும் நிலை ஏற்படுகிறது. பொலிவற்ற முகத்தை பொலிவு பெறச் செய்ய சில இயற்கை வழிகளை பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:-

*உலர்ந்த ரோஜா இதழ்

*சந்தனம்

*பன்னீர்(ரோஸ் வாட்டர்)

செய்முறை…

ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உலர்ந்த ரோஜா இதழ், சந்தனம் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு சேர்த்து தேவையான அளவு பன்னீர்(ரோஸ் வாட்டர்) சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும்.

20 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் பொலிவாக மாறும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*தயிர்

*தேன்

*எலுமிச்சை சாறு

*மஞ்சள்

*கடலை மாவு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் 3 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் பொலிவாக மாறும்.