வெள்ளை தேமல் மறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

0
235
#image_title

வெள்ளை தேமல் மறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

நம் சருமத்தில் தட்டையாக வெண்மையாக தெரிவதை தான் தேமல் என்று சொல்கிறோம். இவை ஒரு சிலருக்கு ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்படும். தேமல் ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இந்த பூஞ்சை தொற்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் ஏற்படும்.

தேமல் இருப்பவர்கள் பயன்படுத்தும் சோப், டவல் உள்ளிட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு எளிதில் தேமல் தொற்றி விடும். தேமல் பாதிப்பில் இருந்து விடுபட பாகற்காய், சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தேமல் மறைய மேலும் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

1)சீமை அகத்தி இலையை அரைத்து தேமல் மேல் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

2)கருஞ்சீரகத்தை பொடி செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து தேமல் மேல் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

3)நலுங்கு மாவு பொடியை குளிக்கும் பொழுது தேமல் மேல் தடவி வர விரைவில் தேமல் மறையும்.

4)கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தை பொடி செய்து சாப்பிட்டு வர தேமல் மறையும்.

5)ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெயில் வதக்கி ஒரு வாரம் ஊறவிட்டு பின்னர் அதை தேமல் மீது தடவினால் சில தினங்களில் குணமாகும்.

6)பூவரம்பட்டை மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் தேமல் மறையும்.

7)முள்ளங்கி மற்றும் மோரை அரைத்து பேஸ்டாக்கி தேமல் இருக்கும் இடத்தில் தடவி வர சில தினங்களில் அவை மறையும்.