முன் நெற்றியில் 30 நாட்களில் முடி வளர இந்த எண்ணெயை ட்ரை பண்ணுங்க..!!

Photo of author

By Divya

முன் நெற்றியில் 30 நாட்களில் முடி வளர இந்த எண்ணெயை ட்ரை பண்ணுங்க..!!

ஆண்களோ, பெண்களோ அவர்களுக்கு அழகு சேர்ப்பது தலை முடி தான். அதுவும் முன் நெற்றியில் முடி அதிகம் இருந்தால் அழகு இன்னும் கூடும். ஆனால் இன்றைய காலத்தில் மன அழுத்தம், தூக்கமின்மை, வேலைப்பளு, வாழ்க்கை மாற்றம், உணவு முறை மாற்றம், ஜீன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் முன் நெற்றி முடி உதிர்வை சந்தித்து வருகின்றனர். இதனால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.

இந்த முன் நெற்றி முடி உதிர்வு பாதிப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பாலோ செய்தால் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம்

*கருஞ்சீரகம்

*கருவேப்பிலை தூள்

*தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1 தேக்கரண்டி வெந்தயம், 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 1/2 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத் தூளை சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் 1 தேக்கரண்டி கருவேப்பிலை தூளை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் முன் நெற்றி பகுதியில் தடவி வருவதன் மூலம் விரைவில் முன் நெற்றியில் முடி வளரத் தொடங்கும்.