மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதை முயற்சித்து பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதை முயற்சித்து பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!

மலச்சிக்கல் பிரச்சனை ஆரோக்கியமற்ற உணவால் ஏற்படுகிறது.அதேபோல் சரியான நேர்தத்தில் மலம் கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பதாலும் மலச்சிக்கல் உருவாகிறது.நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மலம் வழியாக வெளியேறி வருகிறது.அப்படி இருக்க மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டால் உடல் எப்படி ஆரோக்கியமாக இருக்கும்.இந்த மலச்சிக்கல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது மிகவும் அவசியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

கருப்பு உலர் திராட்சை – 15

விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுல் எடுத்து அதில் 10 முதல் 15 கருப்பு உலர் திராட்சை சேர்க்கவும்.பின்னர் அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

பின்னர் காலையில் ஊற வைத்துள்ள கருப்பு உலர் திராட்சையை நன்கு அழுத்தி அதன் சாற்றை திராட்சை ஊறிய தண்ணீரில் கலக்கவும்.

தொடர்ந்து 1 தேக்கரண்டி சுத்தமான விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வெறும் வயிற்றில் பருகவும்.இதுபோன்று செய்தால் உடலில் தேங்கி கிடந்த மலைக்கழிவுகள் அடுத்த 20 நிமிடத்தில் வெளியேற தொடங்கும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மற்றொரு ரெமிடி:-

தேவையான பொருட்கள்:-

சோம்பு(பெருஞ்சீரகம்) – 1 தேக்கரண்டி

இந்துப்பு – 1 சிட்டிகை

விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.அடுத்து 1 தேக்கரண்டி சோம்பு(பெருஞ்சீரகம்) சேர்த்து கொள்ளவும்.சோம்பு நீண்ட நேரம் கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை.அதன் அதன் நிறம் கொதிக்கும் நீரில் இறங்கும் வரை விட்டால் போதும்.அதோடு 1 சிட்டிகை அளவு இந்துப்பு சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

பிறகு சுத்தமான விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வெது வெதுப்பாக இருக்கும் போதே பருக வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள ரெமிடிகளில் எதை தேர்வு செய்து பயன்படுத்தினாலும் சில வழிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.இந்த ரெமிடியை வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும்.இந்த குடித்த உடன் உணவு எடுத்து கொள்ள கூடாது.அடிக்கடி
வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும்.மலம் முழுவதும் வெளியேற்ற பட்டதும் இளநீர்,தயிர் சாதம் இதுபோன்ற குளிர்ச்சியான பொருட்களை உண்ணலாம்.