காரப் பணியாரம் இந்த முறையில் செய்து பாருங்கள்.. செம்ம டேஸ்டாக இருக்கும்!!
நம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று பணியாரம்.இதில் இனிப்பு பணியாரம்,சாதாரண குழிப்பணியாரம்,காரக் குழிப்பணியாரம் என்று பல வகைகள் இருக்கிறது.பச்சரிசி,இட்லி அரிசி,வெந்தயம்,உளுந்து ஆகியவற்றை குழிப்பணியாரம் 8 மணி நேரம் ஊற வைத்து பின்னர் மாவு பதத்திற்கு ஆட்டி இந்த பணியார வகைகள் செய்யப்படுகிறது.புளித்த மாவில் செய்யும் பணியாரங்களே அதிக சுவையுடன் இருக்கும்.
காரக் குழிப்பணியாரம் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:-
*ஆட்டி வைத்துள்ள அரிசி மாவு – 1 பெரிய பவுல் அளவு
*எண்ணெய் – தேவையான அளவு
*கடுகு – 1/4 தேக்கரண்டி
*கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி
*காய்ந்த மிளகாய் – 4
*பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
*பச்சை மிளகாய் – 3
*கறிவேப்பிலை – சிறிதளவு
*கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:-
1.அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு,உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொரிய விடவேண்டும்.
2.பிறகு அதில் கிள்ளி வைத்துள்ள காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
3.பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடவும்.இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
4.பின்னர் வதக்கி வைத்துள்ள கலவையை பணியாரம் செய்ய எடுத்து வைத்துள்ள அரசி மாவில் கலந்து கொள்ள வேண்டும்.
5.அடுப்பில் ஒரு பணியாரக்கல் வைத்து பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதில் ஒவ்வொரு குழிகளிலும் தேய்க்க வேண்டும்.பின்னர் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கல் சூடேறியதும் தேவையான அளவு மாவு ஊற்ற வேண்டும்.இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
இந்த முறையில் பணியாரம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இந்த காரப் பணியாரத்திற்கு சிறந்த சைடிஸ் தக்காளி சட்னி மற்றும் கார சட்னி ஆகும்.