இந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்!!

0
455

இந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்

 

சீத்தாப்பழம் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.இந்த பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.மேலும் இந்த பழத்தை காட்டிலும் சீத்தா இலைகளில் தான் அதிக சத்துக்கள் உள்ளது.சீத்தா இலையில் அதிக அளவு எண்ணிக்கையில் பொட்டாசியம்,தாதுக்கள்,கால்சியம்,ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலை தோல் வியாதி,சொத்தை பல் பிரச்சனை,பாம்புக்கடி,நீரிழிவு உள்ளிட்ட 8 வித தொந்தரவுகளுக்கு தீர்வாக உள்ளது.

 

1.தோல் வியாதி

 

சீத்தா இலையை காயவைத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பவுல் எடுத்து சீத்தா இலை பவுடர்,மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலக்கி உடம்பில் அரிப்பு மற்றும் படர்தாமரை உள்ளிட்ட தோல் வியாதி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தோல் சம்மந்தமான வியாதிகள் குணமாகும்.

 

2.சொத்தை பல் வலி

 

இரண்டு அல்லது மூன்று சீத்தா இலைகள் எடுத்து அதை நன்கு கழுவி ஒரு உரலில் போட்டு பேஸ்ட் போல் இடித்து கொள்ள வேண்டும்.பிறகு அவற்றை எடுத்து சொத்தை பல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.அல்லது சீத்தா இலை சாற்றை மட்டும் எடுத்து ஒரு பஞ்சை அதில் நனைத்து சொத்தை பல் இருக்கும் பகுதிகளில் நன்றாக பிழிந்து விடலாம்.இதனால் சொத்தை பல்லில் தங்கி இருக்கும் புழுக்கள் வெளியேறி நாள்பட்ட பல் வலி குணமாகும்.

 

3.வாய் துர்நாற்றம்

 

சீத்தா இலையை தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு அதனை கழுவி வாயில் போட்டு நன்கு மென்று பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.பிறகு பிரஷ் செய்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்து வாய் துர்நாற்றம் குறையும்.

 

4.பாம்புக்கடி

 

பாம்பு கடித்தவர்கள் சீத்தா இலையை அரைத்து பேஸ்ட் போல் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் பாம்பின் விஷம் சற்று குறையும்.

 

5.தேவையற்ற முடிகளை நீக்கும்

 

முகத்தில் இருக்கின்ற தேவையற்ற முடிகளை நீக்க வேண்டும் என்றால்,சீத்தா இலையை நன்கு பேஸ்ட் போல் செய்து அவற்றை முகத்தில் மாஸ்க் போல் உபயோகிக்க வேண்டும்.பிறகு 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் இளமை பொலிவுடன் காணப்படும்.

 

6.பேன் மற்றும் பொடுகு பிரச்சனை

 

சீத்தா இலை மற்றும் ஊமத்தை இலையை பேஸ்ட் போல் செய்து கொண்டு தலையில் தடவ வேண்டும்.பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலையை சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வர தலையில் உள்ள பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கி புதிதாக முடி வளர இது பெரிதும் உதவும்.

 

7.ரத்தம் அதிகரிக்க மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்த தீர்வு

 

ஒரு பவுலில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 அல்லது 3 சீத்தா இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அதனை ஒரு டம்ளரில் வடிகட்டி குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்து வருவதன் மூலம் உடம்பில் குறைவான ரத்தம் உள்ளவர்களுக்கு அதிக ரத்தம் உற்பத்தியாகும். மேலும் இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.

 

8.ரத்த காயம்

 

சிறிய உரலில் சீத்தா இலையை போட்டு சாறு வரும் வரை நன்கு தட்டி எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு உடம்பில் ஏற்பட்டுள்ள ரத்த காயங்களில் பூசி வருவதன் மூலம் விரைவில் அவை குணமாகும்.

Previous articleஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்… 
Next articleசமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..!