வெள்ளை மற்றும் செம்பட்டை முடி கருப்பாக மாற இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

0
218
#image_title

வெள்ளை மற்றும் செம்பட்டை முடி கருப்பாக மாற இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

சிறியவர்கள்,பெரியவர்கள் என்று பலருக்கு வெள்ளை முடி மற்றும் செம்பட்டை முடி இருக்கிறது.இன்று கருமை முடியை தலையில் தேடி பார்க்கும் அளவிற்கு முடியின் நிறம் மாறிவிட்டது.

நம் பாட்டி காலத்தில் ஷாம்பு போன்ற இராசயன பொருட்கள் இல்லை.அவர்கள் சீகைக்காய்,அரப்பு போன்றவற்றை தான் தலைக்கு பயன்படுத்தி வந்தனர்.இதனால் அவர்களின் தலை முடி அடர்தியாகவும்,கருமையாகும் இருந்தது.

வயதாலும் பலரின் தலைமுடி அவ்வளவாக நரைக்க வில்லை.ஆனால் இன்று பிறந்த குழந்தைகளுக்கு கூட முடி செம்பட்டையாக தான் இருக்கிறது.கரு கரு கூந்தல் இருந்தால் அது தனி அழகை கொடுக்கும்.

கூந்தல் நிறம் அடர் கருமையாக மாற இரசாயனம் இல்லாத இயற்கை பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய்
2)கருஞ்சீரகம்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 1/2 லிட்டர் சுத்தமான விளக்கெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் அரைத்த கருஞ்சீரகப் பொடியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் வெள்ளை மற்றும் செம்பட்டை முடி நாளடைவில் கருமையாகும்.

Previous articleபங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் இத்தனை நன்மைகள் உண்டாகும்!!
Next articleதிருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!