ஒப்பந்தத்தை ரத்து செயத எலான் மஸ்க்… ட்விட்ட்ர் நிறுவனம் வழக்கு… பரபரப்பு சம்பவம்!

0
209

ஒப்பந்தத்தை ரத்து செயத எலான் மஸ்க்… ட்விட்ட்ர் நிறுவனம் வழக்கு… பரபரப்பு சம்பவம்!

எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது.

இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும், அது சம்மந்தமான தரவுகள் வேண்டும் என எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். அந்த விவரங்கள் வரும் வரை ட்விட்டரை வாங்குவதை கிடப்பில் போடுவதாக அறிவித்தார்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் அதிரடியாக ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ந்தன. இந்நிலையில் இப்போது எலான் மஸ்க்குக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Previous articleஇலங்கை அதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இந்தியா உதவி புரிந்ததா? தூதரகம் அளித்த விளக்கம்!
Next article‘என் ஆலோசனையைக் கேட்டு கோலி செய்த மாற்றம்’… பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் கருத்து