ஒரே ப்ரேமில் இரண்டு லெஜண்ட்கள்! தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்!!

0
31
#image_title

ஒரே ப்ரேமில் இரண்டு லெஜண்ட்கள்! தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்!!

தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தை தலைவர் 170 திரைப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது அவருடைய 170வது திரைப்படமான தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 திரைப்படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் டி.ஜி ஞானவேல் அவர்கள் இயக்கி வருகிறார்.

தலைவர் 170 திரைப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் தலைவர் 170 திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அவர்கள் தயாரிக்கின்றார்.

இதையடுத்து தலைவர் 170 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நெல்லையிலும் நடந்தது. இதையடுத்து முன்றாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில் அந்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் இருவரும் ஒரே ஃபிரேமில் இருக்குமாறு ஒரு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் தலைவர் 170 படத்துக்கான கெட்டப்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் இருவருமே இருக்கின்றனர்.

33 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதனால் தலைவர் 170 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.