இரண்டு “வைட்டமின் ஈ” மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இரண்டு “வைட்டமின் ஈ” மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!!

தலை முடி கருமை நிறத்தில் இருந்தால் நாம் இளமையாக காணப்படுவோம் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. கடந்த 25, 30 வருடங்களுக்கு முன் 45 வயதை தாண்டிய பின் தான் வெள்ளை முடி தலையில் எட்டி பார்க்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது. உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் தான் முக்கிய காரணம்.

இளநரை பாதிப்பு ஏற்படக் காரணம்:-

*முடிகளுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாமை

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது

*தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது

*மன அழுத்தம்

*முறையற்ற தூக்கம்

*அதிகப்படியான டென்ஷன்

இளநரையை சரி செய்ய இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண முயற்சிப்பது சிறந்த ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவள்ளி இலை

*வைட்டமின் ஈ கேப்சியூல்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 1 கைப்பிடி அளவு கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

இந்த கற்பூரவள்ளி இலைகளை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள கற்பூரவள்ளி இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி வைட்டமின் ஈ மாத்திரை 2 சேர்த்து நன்கு கலந்து விடவும். இந்த கலவையை உபயோகிப்பதற்கு முன் தலைமுடியை ஷாம்பு பயன்படுத்தி நன்கு அலசிக் கொள்ளவும்.

பின்னர் முடியை நன்கு காயவைத்து கொள்ளவும். அடுத்து கலவையை முடிகளின் வேர்காள் பகுதியில் போட்டு மஜாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் வைத்திருந்து பின்னர் தலைக்கு ஷாம்பு உபயோகித்து அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் இளநரை அனைத்தும் கருமையாக மாறி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.