காரில் ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்தல்! இரு இளைஞர்கள் கைது

0
215
#image_title

காரில் ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்தல்! இரு இளைஞர்கள் கைது

கொல்லத்தில் காரில் உள்ள ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்திய இரு இளைஞர்கள் கைது.

கேரளா மாநிலம் கொல்லம் சடையமங்கலத்தில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது வந்த காரை வழிமறித்து பரிசோதனை செய்த காரில் ரகசிய அறை அமைத்து, அதில் சுமார் 53 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அவர்களது காரில் இருந்து பல்வேறு மாநிலங்களின் வாகனங்களின் போலி நம்பர் பிளேட்களை போலீசார் கண்டுபிடித்தனர் .

காரில் இருந்த சிற்றாரை சேர்ந்த பெபிமோன், நெய்யாற்றின்கரையை சேர்ந்த ஷைன் ஆகியோரை சடையமங்கலம் போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்பும் இதுபோன்ற கஞ்சா வழக்குகளில் பெபிமோன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இவர் 80 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் சாத்தனூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி. இவர்கள் ஒரிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி கேரளாவில் சில்லரை விற்பனைக்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

Previous articleசூடு பிடிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை! முதல்வர் தொகுதியில் முக்கிய நபர் தற்கொலைக்கு முயற்சி
Next articleநீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி