தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வாருங்கள்! கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்!

0
189

தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வாருங்கள்! கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்!

எல்லோரும் ஏலக்காயில் ஒரு வாசனை பொருளாக தான் பார்க்கின்றார்கள்.
ஆனால் அப்படி கிடையாது ஏலக்காயில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, விட்டமின் சத்துக்கள் எல்லாம் உள்ளன.

தினமும் ஒரு ஏலக்காயை மென்று உண்டு வந்தாலே பல நோய்கள் குணமாகும். இப்பொழுது அதைப் பற்றி விவரமாக பார்ப்போம்.

1. ஒரு சிலருக்கு எவ்வளவுதான் உணவு கட்டுப்பாடோடு இருந்து வந்தாலும் செரிமான பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமானத்திற்கு உண்டான நீர் சுரந்து செரிமானத்தை துரிதப்படுத்தும்.
2. ஒரு சிலருக்கு பசியே ஏற்படாது அவர்கள் ஏலக்காயை உண்டு வந்தால் பசி ஏற்படும்.
3. அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் அவதிபடுபவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.
4. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை கூட இந்த ஏலக்காய் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
5. ஒரு சிலருக்கு சளி ஏற்பட்டு நுரையீரல் முழுவதும் சளி கட்டி இருமலும் சேர்ந்து விடும். அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை மென்று உண்டு வந்தால் சளியை இளக்கி வெளியேற்றிவிடும். இருமலும் குணமடைந்து விடும்.
6. ஒரு சிலருக்கு வயிற்றில் புண் இருந்தால் வாயில் துர்நாற்றம் வீசும். அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, இதயம் நன்றாக துடிப்பதற்கு ஏலக்காய் உதவி செய்கிறது.
8. ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிபடுபவர்கள் ஏலக்காயை மென்று உண்ணலாம்.
9. பல்வலி, ஈறுவீக்கம் இருப்போர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரும்பொழுது பற்களில் உள்ள பிரச்சனைகளை நீக்கும்.
10. ஒரு சிலருக்கு வாகனங்களில் பயணம் சென்றாலே வாந்தி வரும் பிரச்சினை இருக்கும். அப்படி வருபவர்கள் ஒரு ஏலக்காயை வாயில் வைத்துக் கொண்டால் வாந்தி பிரச்சினை இருக்காது.
11. ஆஸ்துமா நோயாளிகள் ஏலக்காய் சாப்பிட்டு வரும் பொழுது மூச்சுவிடும் பிரச்சினைகள் குணமடையும்.
12. உடம்பில் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது ஏலக்காய்.
13. உடம்பில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் தன்மை கொண்டது ஏலக்காய்.
14. உடல் சோர்வு மற்றும் அசதி இருந்தால் ஏலக்காயை நீங்கள் சாப்பிடும் டீயில் சேர்த்து குடிக்கும் பொழுது உடனடியாக புத்துணர்வு கொடுக்கும்.
15. ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ஆண்மை அதிகரிக்கும்.

Previous articleதிடீர் பயணம் மேற்கொண்ட சசிகலா! முதல்வர் ரகசிய கண்காணிப்பு!
Next articleவாடிக்கையாளர்களே உஷார்: இனி பாஸ்புக், செக் புக் செல்லாது… என்றிலிருந்து தெரியுமா?