திடீர் பயணம் மேற்கொண்ட சசிகலா! முதல்வர் ரகசிய கண்காணிப்பு!

0
67

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 4 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் எட்டாம் தேதி அவர் தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வரும் வழி நெடுகிலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பைப் பார்த்த தமிழக மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், நிச்சயமாக சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என நினைத்திருந்தார்கள்.ஆனால் தமிழகம் வந்து சேர்ந்த சசிகலா டிநகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். இன்னும் சொல்லப்போனால் தமிழகம் வந்ததில் இருந்து சசிகலா இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது தெரியாமல் இருந்தது.

ஆனால் இடையிடையே சசிகலா அதை செய்யப்போகிறார், இதை செய்யப் போகிறார், என்கின்ற வதந்தியும் கிளம்பிய வண்ணம் இருந்தது. அவருடைய ஆதரவாளர்கள் சசிகலா எப்போது செயல்பட தொடங்குவார் என்று ஆவலாக எதிர்பார்த்த சமயத்தில் அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்குள்ளான அவருடைய ஆதரவாளர்களும், தமிழக அரசியல்வாதிகளும், திகைப்புக்கு உள்ளானார்கள்.

திடீரென்று ஒரு நாள் இரவு 8 மணி அளவில் சசிகலா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பானது என்னவென்றால் தான் முழுமையாக அரசியலில் இருந்து விலகுவதாகவும் அதே சமயத்தில் வெளியிலிருந்து ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைய பாடுபட போவதாகவும் தெரிவித்திருந்தார். இது தினகரன் மத்தியிலும், அவருடைய ஆதரவாளர்கள் மத்தியிலும், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஒருபுறம் தினகரன் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறமோ திடீரென்று சசிகலா தஞ்சை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவருடைய கணவர் நடராஜனின் தம்பி பழனிவேல் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விழா நடராஜனின் விளார் கிராமத்தில் இருக்கின்ற குலதெய்வ கோவிலில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே அதில் கலந்து கொள்வதற்காக தான் சசிகலா தஞ்சை மாவட்டத்திற்கு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதோடு வரும் 20ஆம் தேதி நடராஜனின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் வரவேற்கின்றது. ஆகவே அன்றைய தினம் அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வருவார் என்று இதற்கு முன்னரே செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் இருப்பதாகவும் ஆகவே சுமார் மூன்று தினங்கள் தஞ்சாவூருக்கு அவர் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சசிகலாவை அரசியல் பிரபலங்கள் சந்திக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இந்த சமயத்தில் அவருடைய சமூக ஓட்டுக்களை உறுதி செய்வதற்காக சசிகலாவின் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதோடு அவர் மேலும் சில வேலைகளில் ஈடுபடலாம் என்று அவரை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதற்கிடையே தஞ்சை மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார் சசிகலா. அவர்களை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என கண்காணிக்குமாறு வைத்திலிங்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா தஞ்சை மாவட்டத்திற்கு சென்ற இதே நேரத்தில் அந்த பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அந்த சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் சசிகலா தொடர்பாக ஒரு சில தகவல்களை கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.