பிரதமரின் வருகையால் ஒற்றுமை பேரணி!! வந்தே மாதரம் என்று கோஷமிடும் மக்கள்!!

Photo of author

By CineDesk

பிரதமரின் வருகையால் ஒற்றுமை பேரணி!! வந்தே மாதரம் என்று கோஷமிடும் மக்கள்!!

நமது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மொடி வருகின்ற 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடனும், மற்றும் முதல் பெண் மணியான ஜில் பைடனும் பிரதமர் நரேந்திர மோடியை உரிய மரியாதையுடன் வரவேற்கவிருக்கின்றனர்.இதனையடுத்து பிரதமர் மோடிக்கு இவர்கள் இருவரும் ஜூன் 22-ஆம் தேதி சிறப்பு விருந்து ஒன்றினை அளிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் வருகையால், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் உள்ளிட்ட இருபது நகரங்களில் வசிக்கும் இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒன்று கூடி பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ஒரு ஒற்றுமை பேரணியை நடத்தி வந்தனர்.

இப்பேரணியில் சிறுவர்கள்,சிறுமிகள், முதியவர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்போது அதில் கலந்து கொண்ட சமூக மக்கள் இந்தியா மற்றும் அமெரிக்கா நாட்டு தேசிய கொடிகளை ஏந்தியும், பிரதமர நரேந்திர மோடியின் உருவ சுவரொட்டிகளையும், சமூகம் சார்ந்த பதாகைகளை கொண்டும் பேரணியை நடத்தினர்.

அப்பேரணியின் போது மோடி மோடி என்றும், வந்தே மாதரம் என்றும் மற்றும் வந்தே அமெரிக்கா என்றும் நாட்டை பெருமை படுத்தும் விதமாக சத்தமாக கோஷமிட்டுக் கொண்டு சென்றனர்.

இந்தியா மற்றும் அமெரிக்காவால் நடந்த இந்த பேரணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் ஹர் ஹர் மோடி என்ற பாடலுக்கு நடனமாடிக்கொண்டும் சென்றனர்.பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம் அங்கே உள்ள மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.