உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு பல நாடுகள் பிளாஸ்மா சிகிச்சை முறையை பின்பற்றுகின்றன. இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பின் உச்சமாக திகழும் அமெரிக்காவில் 58 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு நேற்று முன்தினம் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) ஒப்புதல் அளிக்க தாமதித்து வந்த நிலையில், டிரம்ப் நேரடியாக அவசர ஒப்புதல் அளித்து உள்ளார். எனினும் பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளனர்.