கொத்து கொத்தாய் கொட்டும் தலை முடி உதிர்வை கட்டுப்படுத்த புதினா ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

கொத்து கொத்தாய் கொட்டும் தலை முடி உதிர்வை கட்டுப்படுத்த புதினா ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க!

நவீன காலகட்டத்தில் முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது. தலை முடியை முறையாக பராமரிக்க தவறினால் முடி உதிர்தல், பொடுகு பாதிப்பு ஏற்படும். இதை சரி செய்ய கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து வரவும்.

புதினா இலை
டீ தூள்
வெந்தயம்

புதினா இலை ஒரு கைப்படி அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீரில் பபுள்ஸ் வந்ததும் டீ தூள் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும். எந்த வகை டீ தூளாக இருந்தாலும் சரி இதற்கு பயன்டுத்திக் கொள்ளலாம்.

டீ தூள் சேர்த்த பின்னர் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு கொதிக்கும் விடவும். இவை இரண்டும் நன்கு கொதித்து வந்த பின்னர் சுத்தப்படுத்தி வைத்துள்ள புதினா இலையை அதில் போட்டு சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். புதினா வாசனை தண்ணீரில் முழுவதுமாக இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை தலை முடிகளின் வேர்க்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு நீங்கள் தலை முடிகளுக்கு உபயோகிக்கும் ஷாம்புவை பயன்படுத்தி அலசிக் கொள்ளலாம். இந்த ஹேர் பேக் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.