முகம் வெள்ளையாக மாற கொத்தமல்லி பேஸ் பேக் பயன்படுத்துங்கள்..!!
நம்மில் பலருக்கு முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமை முகத்தை வெள்ளை மற்றும் அதிக பொலிவாக மற்ற இந்த வழியை பாலோ செய்யுங்கள் போதும்.
தேவையான பொருட்கள்:-
*கொத்தமல்லி
*எலுமிச்சை சாறு
*தயிர்
*கற்றாழை ஜெல்
செய்முறை…
ஒரு மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து அதில் 1 தேக்கரண்டி அளவு தயிர், 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி அளவு கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இந்த பேஸ்டை முகத்தில் தடவி நன்கு மஜாஜ் செய்து 15 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை நன்கு கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை என்று தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், கருந்திட்டுகள் மறைந்து முகம் வெள்ளையாகவும், அழகாகவும், பொலிவாகவும் மாறத் தொடங்கும்.