காய்கறி பயிர்கள் செழித்து வளர “மீன் அமினோ அமிலம்” பயன்படுத்துங்கள்!!

0
215
#image_title

காய்கறி பயிர்கள் செழித்து வளர “மீன் அமினோ அமிலம்” பயன்படுத்துங்கள்!!

உங்களில் பலர் விவசாயிகளாக இருப்பீர்கள். சிலர் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் வைத்திருப்பீர்கள். நீங்கள் வளர்க்கும் காய்கறி கொடி மற்றும் செடிகள் நன்கு செழிப்பாக எந்த வித பூச்சி தாக்குதலும் இன்றி வளர மீன் அமினோ அமிலம் பயன்படுத்துங்ககள்.

இவை மீன் கழிவுகள் மற்றும் நாட்டு சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையாகும். பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சியூக்கியாக செயல்படும் இதை எவ்வாறு தயாரிப்பது என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

முதலில் ஒரு கிலோ மீன் அல்லது மீன் கழிவுகள் எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போடவும். அதன் பின்னர் ஒரு கிலோ நாட்டு சர்க்கரையை அதில் போட்டு நன்கு குலுக்கி விடவும். பிறகு மூடி போட்டு நிழலான இடத்தில் வைத்து வாரம் ஒருமுறை மூடி திறக்காமல் குலுக்கி விடவும்.

1 1/2 மாதம் கழித்து பார்த்தால் மீன் நாட்டு சர்க்கரை நொதித்து பழ வாசனை அடிக்கும். இவ்வாறு நறுமணம் வீசினால் மீன் அமினோ அமிலம் தயாராகி விட்டது என்று அர்த்தம்.

இந்த மீன் அமினோ அமிலத்தை 10 லிட்டர் தண்ணீரில் 200 அல்லது 300 மில்லி அளவு கலந்து செடிகளின் வேர் பகுதியில் ஊற்றி விடவும்.

இவ்வாறு மாதம் ஒருமுறை செய்து வந்தால் செடிகளில் பூச்சி, புழு தாக்குதல் ஏற்படாமல் ஆரோக்கியமாக வளரும்.