முகம் பொலிவாக இருக்க அதிமதுரத்தை இப்படி பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

முகம் பொலிவாக இருக்க அதிமதுரத்தை இப்படி பயன்படுத்துங்கள்!

இன்றைய உலகில் இளம் தலைமுறையினர் விரைவில் முதுமை தோற்றத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம். சருமத்தை சரியாக பராமரிக்காமல் விட்டாலும் முகம் பொலிவற்று காணப்படும்.

இதை சரி செய்ய வாரத்தில் ஒரு முறை அதிமதுர பேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*அதிமதுர பொடி – 2 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

*கடலை மாவு – 2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அதிமதுர பொடி, 2 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி மஜாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.

மற்றொரு தீர்வு…

தேவையான பொருட்கள்:-

*அதிமதுர பொடி – 2 தேக்கரண்டி

*முல்தானி மெட்டி – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*பால் – தேவையான அளவு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அதிமதுர பொடி, 1 தேக்கரண்டி முல்தானி மெட்டி, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து நன்கு கலந்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி மஜாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.