பாத்ரூம் டைல்ஸ் மஞ்சள் கறை நீங்க இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள்..!!

0
252
#image_title

பாத்ரூம் டைல்ஸ் மஞ்சள் கறை நீங்க இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள்..!!

நம்மில் பலரது வீட்டு பாத்ரூம் டைல்ஸ் மஞ்சள் மற்றும் உப்பு கறை படிந்து பார்க்க அசுத்தமாக காணப்படும். பாத்ரூம் சுத்தமாக இருந்தால் தான் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாமல் இருக்கும். பாத்ரூமில் கறை, பாசி படிந்து கடந்தால் அவை துர்நாற்றத்தை தான் ஏற்படுத்தும்.
இதை சுத்தம் செய்ய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் போதுமானது. இதனால் பாத்ரூம் சுத்தமாக காணப்படும்.

தேவையான பொருட்கள்:-

*வினிகர்

*சோடா உப்பு

*வாஷிங் பவுடர்

*கோலமாவு

*ஷாம்பு

செய்முறை…

ஒரு பாக்கெட்டில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 2 தேக்கரண்டி வினிகர், 1 தேக்கரண்டி சோடா உப்பு, 1 தேக்கரண்டி வாஷிங் பவுடர், 1 தேக்கரண்டி கோலமாவு மற்றும் 1 தேக்கரண்டி ஷாம்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை பாத்ரூம் முழுவதும் தெளித்து 15 நிமிடங்களுக்கு ஊறவிட்டு பின்னர் ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்த்து தண்ணீர் ஊற்றி அடித்து விடவும். இவ்வாறு செய்தால் பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறை, உப்பு கறை மற்றும் துர்நாற்றம் முழுவதும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.