இளநரை ஒரே வாரத்தில் கருமையாக மாற தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருட்களை சேர்த்து பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

இளநரை ஒரே வாரத்தில் கருமையாக மாற தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருட்களை சேர்த்து பயன்படுத்துங்கள்!!

இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும்.

இளநரை உருவாகக் காரணங்கள்:-

*ஊட்டச்சத்து இல்ல உணவு

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல்

*தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல்

*முறையற்ற தூக்கம்

*மன அழுத்தம்

நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கை ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை:-

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 200 மிலி

*கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி

*மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு

*கரிசலாங்கண்ணி பொடி – 1 தேக்கரண்டி

எண்ணெய் காய்ச்சும் முறை…

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்க்கவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு மருதாணி இலைகளை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை சூடாகி கொண்டிருக்கும் எண்ணெய் கலவையில் சேர்த்து கிளறவும்.

தேங்காய் எண்ணெயின் நிறம் மாறி வந்ததும் எடுத்து வைத்துள்ள 1 தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியை அதில் சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி சேமித்து வைக்கவும். இந்த மூலிகை எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தோம் என்றால் இளநரை அனைத்தும் அடர் கருமையாக மாறிவிடும்.