வெயில் காலத்தில் காய்ந்து போன உதடுகள் மென்மையாக இரவில் இதை யூஸ் பண்ணுங்கள்!!

0
184
#image_title

வெயில் காலத்தில் காய்ந்து போன உதடுகள் மென்மையாக இரவில் இதை யூஸ் பண்ணுங்கள்!!

உதடு கருமையாக,வறட்சியாக இருந்தால் கீழே கொடுக்கபட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி தீர்வு காணுங்கள்.

1)எலுமிச்சை சாறு
2)தேன்

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குழைத்து இரவில் படுக்கச் செல்வதற்கு முன் உதடுகளில் பூசினால் உதடு வறட்சி நீங்கி மிருதுவாகும்.

1)வெள்ளரிக்காய்

சிறிது வெள்ளரி துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி உதட்டில் பூசி 30 நிமிடங்களுக்கு பின்னர் உதட்டை சுத்தம் செய்யவும்.இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் உதடு நிறம் மாறும்.

1)கற்றாழை ஜெல்

ஒரு ஸ்பூன் பிரஸ் கற்றாழை ஜெல்லை காலை மற்றும் மாலை உதடுகளில் பூசி 30 நிமிடங்களுக்கு பின்னர் சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்வதன் மூலம் உதடு கருமையாவதை தடுக்க முடியும்.

1)பீட்ரூட்
2)தேன்

ஒரு ஸ்பூன் பீட்ரூட் பேஸ்ட்டில் 1/4 ஸ்பூன் தேன் சேர்த்து குழைத்து உதட்டில் அப்ளை செய்யவும்.சில நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீர் கொண்டு உதட்டை சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்வதினால் உதடு கருமை நீங்கும்.

1)கேரட்
2)பீட்ரூட்

ஒரு ஸ்பூன் கேரட் பேஸ்ட் மற்றும் ஒரு ஸ்பூன் பீட்ரூட் பேஸ்டை குழைத்து உதட்டில் பூசி சிறிது நேரம் மஜாஜ் செய்யவும்.பிறகு குளிர்ந்த நீர் கொண்டு உதட்டை சுத்தம் செய்யவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் உதடு கருமை,வறட்சி நீங்கும்.